பல வருட கனவை நிறைவேற்றினார் நீரஜ் சோப்ரா 🥇🥇🥇



ஜப்பானில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்து இருக்கிறது,எப்பொழுதும் போல அதிக ஆர்வத்துடன் இந்திய மக்கள் எப்படியாவது ஒரு தங்கப்பதக்கத்தை இந்திய வாங்கிவிடவேண்டும் என்று ஏங்கி காத்து கொண்டு இருந்தனர்.துப்பாக்கி சுடுதல்,குத்துசண்டை,பேட்மிட்டன்,ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் மட்டுமே நமது கவனம் இருந்தது ஏன் என்றால் நாம் அதில் தான் அதிக பதங்கங்களை வாங்கி இருக்கிறோம் அதேபோலவும் நடந்தது தங்கபதக்கம் இல்லாவிட்டாலும் வெள்ளி வெண்கல பதக்கங்கள் கிடைத்தது. 



இந்தமுறை நமது பார்வைகளை அதிலிருந்து நகர்த்தினார்கள் நமது வீரர்கள் உதாரணத்திற்கு சொல்ல போனால் வட்டு எரிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற கமால் ப்ரீதி கவுர் இதுவரை நமக்கு அறிமுகமே இல்லாத கோல்ப் போட்டியில் 200வது இடத்தில இருந்து கொண்டு உலகின் நம்பர் வீராங்கனையான Nelly Kordaவை இறுதிப்போட்டியில் மூன்று ரௌண்டகளை முன்னிலை வகித்து சற்றே அதிர வைத்த அதிதி அசோக் இவர்கள் மூலம் நமக்கு எப்படியாவது தங்கப்பதக்கம் கிடைக்கும் எல்லோரும் எதிர்பார்த்தோம்.அதுவும் அதிதி அசோக்கின் இறுதிப்போட்டியை பார்க்க விடியற்காலையில் எழுந்தவர்களும் உண்டு நுலியையில் பதக்கங்கள் நம்மை விட்டு போனது.நாமும் இந்த முறையும் தங்கம்வெல்வது  கனவாக தான் இருக்குமோ என்று நினைத்து கொண்டு நகர்ந்தோம்,PT உஷா,மில்கா சிங் போன்றவர்கள் சில நொடிகளால் தவறவிட்ட அந்த தங்கத்தை ஆகஸ்ட் 7 மாலை நேரத்தில் தடகளத்தில்  இந்தியாவிற்காக முதல் தங்கப்பதக்கத்தை ஈட்டி எறிதலில் வென்று கொடுத்தார் 23 வயதே ஆன நீரஜ் சோப்ரா இதுவரை அந்த பெயரையே கேள்விப்பட்டு இருக்காதவர்கள் அன்றுதான் அவரை பற்றி தேட ஆரம்பித்தார்கள் அவரை பற்றி தேட தேட கிடைத்தது எல்லாம் தங்கம் தான் 2017,2018 ஆசிய போட்டிகள்,சிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டிகள் மூன்றிலுமே ஈட்டி எறிதலில் தங்கம் வென்றிருந்தார் இந்த தங்க மகன்.





சரி வாருங்கள் நாம் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு செல்வோம் அதில் நடந்த தகுதிசுற்று போட்டியில் மொத்தம் 32 வீரர்கள் கலந்து கொள்வார்கள் அதில் ஒரு வீரருக்கு சரியாய் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும் அதில் சிறப்பாக செயலப்டும் 12 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள் அதில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 85.64 மீட்டர் வீசி இறுதிசுற்றுக்கு தகுதிபெற்றர் நீரஜ் சோப்ரா.அடுத்து இறுதிச்சுற்று போட்டி மாலை பொழுதில் நடந்தது அன்று நீரஜ் சோப்ராவை அறிந்தவர்கள் டிவியின் முன் அமர்ந்து இருந்தனர் என்னைப்போன்றோர் பலர் எப்படியாவது இந்திய தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசையில் அமர்ந்து இருந்தனர்.கடும்போட்டி நிலவும் என்று எல்லாருக்கும் தெரியும் முதலில் அதிக தூரம் வீசிவிட்டால் மற்ற போட்டியாளர்கள் நிச்சயம் தடு மாறுவார்கள் அதைத்தான் நீரஜ் சோப்ராவும் செய்தார் தனது முதல் வாய்ப்பிலேயே 87 மீட்டருக்கு மேல் வீசி முதல் இடத்திற்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா ஆனால் சக போட்டியாளரான ஜெர்மனியை சேர்ந்த ஜோனஸ் வெட்டர் 97 மீட்டர் அவரது கேரியர் ரேகார்டாக இருந்தது அவர் எப்படி வீச போகிறார் என்ற நிலை இருந்தது ஆனால் அவர் 87 மீட்டரை தொடவே இல்லை,நீரஜ் சோப்ரா இரண்டாவது முறை வீசினார் வீசி முடித்தவுடனே தனது இரு கைகளையும் தூக்கி தான் வெற்றிபெறப்போவதை முன்கூட்டியே அறிவிப்பு செய்வதுபோல சிறிது கொண்டாடினார் அதேபோல அந்த எட்டியும் 87.58 மீட்டர் அடைந்து தங்கப்பதக்கத்தை உறுதிசெய்தது அவ்வளவு தான் இந்தியாவே கொண்டாட்டத்தில் மூழ்கியது.வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் பொழுது அனைவரின் கண்களும் ஆனந்தகண்ணீரால் மூழ்கி போனது.


இந்த வெற்றியை மறைந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கிற்கு சமர்ப்பிப்பதாக கூறினார் நீரஜ் சோப்ரா.


 


Post a Comment

0 Comments