நாம எல்லாருமே கார் அல்லது பைக்ல பயணம் செஞ்சுருப்போம் அப்படி போகையில நாம எல்லாருமே வெறுக்குற ஒரு விசயமா ட்ராபிக்ல மாட்டிகிட்டு சிரமப்படுறது,வேலைக்கு போறவங்க நிறைய அனுபவச்சு இருப்பிங்க.அதுவும் மும்பை மாறி ஒரு பெரிய நகரத்துல ட்ராபிக்கல சிக்னல மாட்டிகிட்டு இருந்து உங்களோட பின்னாடி இருக்கிறவங்க,இருக்குறது ரெட் சிக்னல் அப்டினு தெரிஞ்சும் தொடர்ந்து ஹாரன் அடிச்சிட்டே இருந்த எப்படி இருக்கும் அந்த இடமே ஒரு பெரிய போர்க்களம் போல காட்சி அளிக்கும் இதனால சுத்தியிருக்குறவங்களுக்கும் பிரச்சனை இதனால Noise Pollution அதிகமா ஏற்படும் இதை எல்லாம் தடுக்க மும்பை காவல்துறை 2020 ஆம் ஆண்டு ஒரு அருமையான திட்டத்தை கையில் எடுத்தாங்க அந்த திட்டத்திற்கு பெயர் "The Punishing Signal" அந்த திட்டத்தை மும்பையின் முக்கிய இடங்கள முதற்கட்டமா செயல்படுத்த துவங்குனாங்க இந்த இடங்கள CSMT, Marine Drive, Peddar Road, Hindmata and Bandra.
அந்த திட்டம் என்ன அப்டினு பார்த்தோம்னா மேல சொன்ன இடங்கள உள்ள டிராபிக் சிக்னல் ஒட டெசிபல் மீட்டர் சேர்த்து வச்சாங்க,அந்த டெசிபல் மீட்டர் 85 மேல போனுச்சு அப்டினா திரும்ப முதல்ல இருந்து அந்த சிக்னல் ரன் ஆக ஆரம்பிச்சுரும் அந்த போர்டுல இப்படி எழுதியிருந்தாங்க Honk More Wait More. இந்த திட்டம் நல்ல பலனை கொடுத்துச்சு இதை அப்படியே மும்பை போலீஸ் அவங்களோட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாங்க அது நல்ல Viral ஆச்சு.ஆனா சில பேர் சில கேள்விகளையும் வட்சங்க ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வாகனம் வந்த எப்படி போகும் அப்படினு.
0 Comments