முக்கியமான போட்டிகள் இங்கிலாந்தில் நடத்த கூடாது என்று உள்ளூர்கராரே சொல்லும் அளவிற்கு பாடாய்படுத்துகிறது மழை


 

மூன்றாவது நாளில் நியூஸிலாந்து அணி டாம் லதாம் மற்றும் டேவன் கான்வே உடன் ஆட்டத்தை தொடர்ந்தனர்,முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீச துவங்கினார்,என்னதான் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமா இருந்தாலும் இந்திய பந்துவீச்சளர்களால் நியூஸிலாந்தை போல் பந்தை அவ்வளவாக ஸ்விங் செய்ய முடியவில்லை வேகத்தை நம்பியே பந்துவீச்சாளர்கள் பந்துகளை வீசி கொண்டு இருந்தனர்.இடதுகை பேட்ஸ்மேன்களை அதிகமுறை இஷாந்த் சர்மா வீழ்த்தியிருப்பதால் அவரே தொடர்ந்து பந்துவீசினார் நல்ல லென்தில் பந்துவீசினாலும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அசராமல் நின்றுகொண்டு இருந்தனர் பும்ராவின் பந்துவீச்சும் அவ்வளவாக



எடுபடவில்லை,அடுத்து ஷமியும்,அஸ்வினும் அட்டாக்கிற்கு வந்தனர்.ஷமியின் பந்துவீச்சு ஸ்விங் ஆகினாலும் விக்கெட் வீழவில்லை அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறினாலும் அது முதலில் கைகொடுக்கவில்லை.30 ஒவர்களை தாண்டி நியூஸிலாந்து அணி விக்கெட் ஏதும் வீழாமல் விளையாடிக்கொண்டு இருந்தனர்,கடைசியாக டாம் லதம் அஸ்வின் பந்தை அடிக்க முற்பட்டு extra Coveril கோலியிடம் கேட்ச் ஆனார்.அடுத்தது உள்ளே வில்லியம்சன் வந்தார் மிகவும் பொறுமையாகவே வில்லியம்சன் தொடங்கினார் ஷாட் ஏதும் போகாமல் டேபின்சிவ் modeலேயே விளையாடினர் வில்லியம்சன் மறுமுனையில் கான்வே கிரிக்கெட்டில் தனது இரண்டாவத



அரைசதத்தை பூர்த்தி செய்தார்.அடுத்து ட்ரிங்க்ஸ் இடைவேளை அதை முடித்து ஆட்டம் மீண்டும் ஆரம்பம் ஆனது இஷாந்த் சர்மா வீசிய பந்தை அடிக்க முற்பட்டு கான்வே ஷமியிடம் கேட்ச் ஆனார்.அந்த நாள் முடிய குறைந்த நேரம் மட்டுமே இருப்பதால் நைட் வாட்ச்மேனாக யாராவது இறங்குவார்கள் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஸ் டெய்லர் பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் இரண்டு பந்து மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது ஆட்டம் நேரம் முடிவில் நியூஸிலாந்து அணி 101/2 என்ற நிலையில் இருந்தது.இந்த நாள் ஆட்டம் முடியாவதற்கு முன்பே ரசிகர்கள்



கணித்துவிட்டனர் அடுத்த நாள் ஆட்டம் மழையால் கண்டிப்பா நடைபெறாது என்று.அதைப்போலவே சௌதாம்ப்டன் வானிலையும் கைகொடுக்கவேயில்லை அந்த நாளுடைய ஆட்டம் முழுமையா கைவிடப்பட்டது.இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான போட்டிகள் இங்கிலாந்தில் நடத்த கூடாது என்று உள்ளூர்கராரே சொல்லும் அளவிற்கு பாடாய்படுத்துகிறது மழை.அடுத்த நாள் வந்துருங்க நாளை வெயில் அடிக்கும் என்று சொல்லிவிட்டு பலர் சமூகவலைத்தளங்களில் வேறு பஞ்சாயத்திற்கு சென்றுவிட்டனர்.அடுத்த நாள் ஆட்டம் அன்றைக்கு தான் பலர் நீல வானத்தையே பார்த்தனர்.



எப்படியும் இன்றைக்கு முழு நாளும் போட்டி நடந்துவிடும் என்று ஆவலோடு தொலைக்காட்சி முன் அமர்ந்தனர் போட்டி தொடங்கியது வில்லியம்சனும்,டெய்லறும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.எதிர்ப்பார்த்தது போலவே இரண்டு பெரும் தடுப்பாட்டத்தையே ஆடினார்.இந்திய கேப்டன் கோலி பார்த்து கையை அசைத்து ரசிகர்களை உற்சாகம் செய்ய சொன்னார் பலனில்லை ஆட்டம் ஒரு வித அமைதியுடனே சென்று கொண்டு இருந்தது,ஆனால் நிச்சயம் ஒரு பக்கம் ஆட்டம் மாறும் அது எந்த பக்கம் என்று தெரியாமல் சென்று கொண்டு இருந்தது.ஷமி தனது பந்துவீச்சை தொடர்ந்தார் இதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த ஆட்டம் ஷமியின் பந்துவீச்சை



எதிர்கொண்ட ரோஸ் டெய்லர் அதை அடிக்க முற்பட்டு கில்லின் ஒரு சிறப்பான fieldingil அவுட் ஆனார் டெய்லர்.அடுத்து ஹென்றி நிக்கோலஸ் உள்ளே வந்தார் வந்த சற்று நேரத்திலே இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்,அந்த நாள் கொஞ்சம் கொஞ்சமா இந்தியா பக்கம் திரும்பியது அடுத்தது வாட்ளிங் உள்ள வந்தார் ஒரு ரன் எடுத்த நிலையில் சமியின் பந்துவீச்சில் போல்டனார்.மறுப்பக்கம் வில்லியம்சன் எதற்கும் அசைத்து கொடுக்காமல் நிலைத்து நின்றார் அடுத்து Grandhomme உள்ள வந்தார்,கமெண்ட்டர்ஸ் "If Bumrah joins the party, India will be unstoppable!" என்று இந்தியாவின் பந்துவீச்சை பாராட்டி கொண்டு இருந்தனர்.Grandhomme பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்து கொடுத்திருந்தார் இந்தியாவின் பந்துவீட்ச்சாளர்கள் கிவிஸை விடுவதா இல்லை சமியின் பந்துவீச்சில் Grandhomme LBW-இல் வெளியினர் அடுத்து இந்தியாவை தனது பந்துவீச்சில் திணறிடித்த



ஜேமிசன் உள்ளே வந்தார் அவரும் 3,2,2 என்று தனது ஓட்டத்தின் மூலம் ரன்களை சேர்த்துகொண்டு இருக்க திடிரென்று ஷமியின் பந்தில் தூக்கி சிக்ஸரை அடித்தார் ஜேமிசன் அதற்கு அடுத்த பந்தையும் தூக்கி அடிக்க டாப் edgilபட்டு மேல போவ பௌண்டரி ரோப் அருகே பும்ராஹ் கேட்ச் பிடித்தார் அவரும் வெளியயேற அடுத்து சௌதீ வர இத்தனைக்கும் வில்லியம்சன் நிதானமாக தனது அரைசதத்தை நெருங்கி கொண்டு இருந்தார்.மறுமுனையில் ஒரு இஷாந்த் சர்மா சௌதிக்கு ஒரு caught & bowled சான்ஸ் தவறவிட மறுமுனையில் வில்லியம்சன் 49 ரன்களில் இருந்தார் மீண்டும் இஷாந்த் சர்மா பந்துவீச வில்லியம்சன் ஸ்லிப்பில் கோலியிடம்



கேட்ச் கொடுத்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்யாமல் வெளியேறினார் அடுத்து வாக்னர் உள்ள வந்தார் மறுமுனையில் சௌதீ 4,6 என அடித்து கொண்டு இருந்தார்,வாக்னர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக போல்ட் உள்ளே வந்தார் அவரும் தன் பங்கிற்கு பௌண்டரி அடிக்க சௌதி ஜடேஜா வீசிய பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர அடிக்க நியூஸிலாந்து அணி 32 ரன்கள் லிடில் வந்து நின்றது ஜடேஜாவின் அடுத்த பந்தில் சௌதீ போல்ட் ஆனார் நியூஸிலாந்து அணியின் ஆட்டம் முதல் இன்னிக்ஸ் முடிவுக்கு வந்தது.

Post a Comment

0 Comments