அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் Jana Gana Mana



Jana Gana Mana 2022 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ், மம்தா மோகன்தாஸ், சுராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படம்.இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு மிக பெரிய பல்கலைக்கழத்தில் பேராசிரியராக இருக்கும் மம்தா மோகன்தாஸ்  கொலை செய்யபட்றாங்க. அவங்க கல்லூரி பேராசிரியர் அதனால மாணவர்கள் எல்லாம் குற்றவாளிகளை உடனே கைது செய்யணும் அப்படினு மாணவர்கள் எல்லாரும் போராட்டத்தில் இறங்குறாங்க அந்த மாணவர்களை கலைக்க போலீஸ் அவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்துறாங்க இதனால இந்த போராட்டம் நாடு முழுக்க பெரிய மாணவர்கள் போராட்டமாகமாறுது  இதனால அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தம் ஏற்படுது.




இதனால ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்கிறது அரசாங்கம் அதற்கு தலைமையா சுராஜ் நியமிக்கப்படறாரு தொடர் விசாரணைகள் மூலமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறாங்க அவங்ககிட்ட விசாரணை செய்ய ஆரம்பிக்கிறாங்க எந்த பலனும் இல்லை மறுபுறம் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க மாணவர்கள் ஒருபுறம்  போராட்டம் செய்ய ஆரம்பிக்கிறாங்க அதன் பிறகு குற்றவாளிகளை வேற ஒரு போலீஸ் நிலையத்திற்கு மாற்ற சொல்லி தகவல் வருது அதோட சுராஜ் அந்த வழக்கிலிருந்து மாற்றப்படுறார் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இப்படியேவிட்டால் குற்றவாளிகள் தப்புச்சுருவாங்க அப்படினு போகும் வழியில் Encounter செய்றாரு.





இதை மாணவர்கள் எல்லாரும் கொண்டாடறாங்க இதை எதிர்த்து மனித உரிமை ஆணையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குறாங்க இது ஒரு போலி Encounter அப்படினு மக்கள் மத்தியில் இது பெரிய வரவேற்பை பெற்றதுனால நீதிமன்றத்தில் யாரும் எதிர்த்து வாதிட வரமாட்டாங்க அப்படினு எல்லாரும் எதிர்பார்த்து இருக்கும் போது பிரித்திவிராஜ் எதிர் தரப்பு வக்கீல் ஆக ஆஜராகிறாரு அதன் பிறகு என்ன நடக்குது என்பது தான் மீதி கதை.






இந்த திரைப்படம் கதையே தாண்டி நாட்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை படத்திலும் காட்சியிலும் இணைச்சியிருக்காங்க உதாரணமாக சொல்லபோனோம் என்றால் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் நமது நாட்டில் JNUவில் நடைபெற்றது, நாட்டில் தொடர்ச்சியா நடைபெற்ற கும்பல் கொலைகள், காவல் துறை அத்துமீறலால் நடைபெற்ற Lock Up Deaths, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு என்றால் இந்த ஒட்டுமொத்த சிஸ்டமும் அவங்களுக்காக செயல்பட எப்படி மாத்துறாங்க அதை எல்லாம் தெளிவாக காட்சிப்படுத்தி இருப்பாங்க.


முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் அவர்கள் இது கதையை தேர்வு நடித்திருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு,அனைவரும் பாருங்கள்

Post a Comment

0 Comments