உண்மையான அன்பிற்கு வயது ஒரு தடையே இல்லை..


ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஆணோ அல்லது பெண்ணோ நெடுந்தூர ஓட்டம் ஆன மாரத்தானில் பங்கேற்றால் சாதாரண செய்தி,அதுவே ஒரு 60 வயது பெண்மணி பங்கேற்றால் அது நிச்சயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செய்திதான்.அப்படி ஒரு செய்தி 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில செய்தித்தாள்களில் வந்தது.அந்த ஒரு செய்தியை பற்றி தான் பார்க்க போகிறோம்,மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 100 கிலோமீட்டர்களுக்கு தொலைவில் உள்ளது Baramati என்னும் ஊர்.மேற்சொன்ன பத்திரிகை செய்திக்கு சொந்தக்காரர் அந்த ஊரை சார்ந்த பெண்,எதற்க்காக இந்த வயதில் மாரத்தான் ஒட வேண்டும் என்று அந்த செய்தியை படிக்கிற அனைவருக்கும் தோன்றியிருக்கும்,அந்த பெண் ஓடியதற்கு பின்னால் ஒரு உண்மையான அன்பு நிறைந்து இருக்கிறது,அந்த அன்பு தனது கணவனின் உடல்நலத்தை பற்றியது.




அந்த பெண்ணின் பெயர் Lata Kare,தனது கணவரோடு அந்த கிராமத்தில் வசித்து வருகிறார் லதா காரே தனது கணவருக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போகிறது,மருத்துவமனைக்கு அல்லது சென்றவுடன் மருத்துவர்கள் MRI ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்,லதா காரோ தினக்கூலியாக வேலை செய்பவர் ஸ்கேன் எடுக்க அவரிடம் பணம் இல்லை,தனக்கு தெரிந்தவர்கள் எல்லாரிடமும் பண உதவி கேட்கிறார்.ஆனால் பணம் கிடைத்தபாடில்லை பிறகு அருகில் இருந்த பள்ளியில் வேலை சேர்கிறார்,அங்கே சில மாணவர்கள் மூத்த குடிமக்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெறுவதை பற்றி பேசிகொண்டு இருக்கிறார்கள்.அந்த செய்தி தெரிந்து கொண்டு அதில் பங்கேற்று வெற்றிபெற்றால் தனது கணவருக்கு ஸ்கேன்மற்றும் இதர மருத்துவ செலவுகளை செய்ய உதவும் என்று அவருக்கு தோன்றுகிறது.



பின்னர் அந்த மாராத்தானில் கலந்து கொள்ள தன்னுடைய பெயரையும் பதிவு செய்கிறார் லதா கரோ,அதன் பிறகு அந்த மரத்தானில் பங்கேற்கிறார். லதா அங்கு தன்னோடு இருக்கிற சக போட்டியாளர்கள் எல்லாம் பலவிதமான உடைகளில் இருக்கிறார்கள்,சூ அனைத்து நிற்கிறார்கள் நானோ
வெறும் காலுடன் நான் எப்பொழுதும் அணியும் சேலையுடன் பங்கேற்று இருக்கிறேன்,பிறகு எனக்கு தோணியது எல்லாம் ஒன்றுதான் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் தன் கணவரின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டே ஓடி அந்த மரத்தானில் வெற்றி பெறுகிறார்.
அவர் வெற்றிபெற்றவுடன் அந்த செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் வந்தது,இதை படித்து பிறகு பல அவருக்கு உதவ முன்வந்தனர் அவர் கணவரின் மருத்துவ தேவை அனைத்தும் பூர்த்தியானது.பிறகு அந்த செய்தியை அறிந்த இயக்குனர் ன் Naveen Deshaboina என்றே இயக்குனர் அதை அப்படியே படமாக எடுக்கிறார்.



அந்த படம் இந்த வருடம் Special Mention Award பிரிவில் தேசிய விருதை பெற்று இருக்கிறது அந்த படம்.

Post a Comment

0 Comments