உலக இரத்ததான தினம் ஜூன் 14 இரத்த பிரிவுகளை கண்டுபிடித்த Karl Landsteiner அவர் நினைவாக அவருடைய பிறந்த நாளில் உலக இரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வரலாற்றில் சிறப்பான நாள்களில் அதுபோல இந்த வருட பிரச்சாரமாக “Give blood and keep the world beating” என்ற பிரச்சாரத்தை இந்த தினத்தில் மேற்கொள்ளகிறது.இரத்ததானம் சம்மந்தமாக சில விபரங்களை பார்ப்போம்.யார் யார் எல்லாம் இரத்ததான செய்ய தகுதியானவர்கள் அதை முதலில் பார்ப்போம்,
18 வயது மேலுள்ள நபர் தனது உடல் எடையில் 50 கிலோவிற்கு மேல் இருந்து தனக்கு எந்த வித நோயியும் இல்லையென்றால் தாராளமாக மூன்று மாதத்திற்கு 1 முறை தாராளமாக இரத்ததானம் செய்யலாம்.இப்பொழுது ஒருவருக்கு மருத்துவமனையில் இரத்தம் கொடுக்க நீங்கள் செளக்கின்றிர்கள் பெரிய தயாரிப்புயெல்லாம் தேவையில்லை நீங்கள் மது அருந்தியிருக்ககூடாது,
புகைபிடித்திருக்ககூடாது.நீங்கள் இரத்தம் கொடுப்பதற்கு முன்னாள் நன்றாக உணவு அருந்தியிருக்கவேண்டும் வெறும் வயிற்றில் இரத்த தானம் கொடுக்க கூடாது அவ்வளவுதான்.நம்மில் நிறைய பேருக்கு ஒரு அச்சம் இருக்கும் இரத்ததானம் செய்தால் நம்முடைய உடலில் இரத்தம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் நிறைய பேருக்கு இருக்கு.இதை வெளியில் கேட்பதற்கு சங்கடப்பட்டு இருப்பார்கள் நிச்சயம் என்னுடைய நண்பர்களும் இருந்தார்கள் அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம் நம்முடைய உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் இருக்கிறது அதிலிருந்து நாம் கொடுக்க போகும் இரத்தத்தின் அளவு வெறும் 300 முதல் 350 மில்லிலீட்டர் (ML) அவ்வளவுதான்.அந்த இரத்தமும் நம்முடைய உடலில் ஒரு வாரத்திற்குள்ளே உற்பத்தியாக தொடங்கிவிடும்.இரத்ததானம் கொடுப்பதினால் நமக்கு இருதய கோளாறுகள்(Heart Attack) வருவது குறைவதாக ஆய்வுகள சொல்றாங்க.
அதனால தேவையுள்ள மக்களுக்கு இரத்தம் தேவைப்படும் பொழுது தாராளமாக இரத்ததானம் செய்யலாம். அதுமட்டுமின்றி இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரத்ததானம் செய்யலாமா என்று கேள்வி இருக்கும் முதல் அல்லது இரண்டாவது தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் போட்டுக்கொண்ட நாளிலிருந்து 14 நாட்கள் கழித்து இரத்ததானம் செய்யலாம்,அப்டி மேலும் உங்களுக்கு சந்தேகமிருந்தால் நீங்கள் இரத்ததானம் செய்வதற்கு முன் மருத்துவரிடம் தடுப்பூசி செலுத்திய விபரத்தை தெரிவித்து ஆலோசனை பெற்று இரத்ததானம் செய்யுங்கள்.
0 Comments