Deep Dive Dubai-உலகின் ஆழமான நீச்சல் குளத்தை வடிவமைத்து அசத்திய துபாய்



உலகை சுற்றிபார்ப்பவர்களுக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்றாக நிச்சயமாக துபாய் இருக்கும்,அதுவும் தங்கள் நாட்டை நோக்கி சுற்றுலா வருபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஏதவாது ஒரு வகையில் ஆச்சரியத்தை அளித்து கொண்டே இருக்கும் ஐக்கிய அரபு அமீரக நகரம் துபாய் உதாரணத்திற்கு சொல்ல போனால் உலகிலேயே உயர்ந்த கட்டிடமான BURJ KHALIFA அங்குதான் அமைத்து இருக்கிறது இன்னும் எண்ணற்ற வித்தியாசமான இடங்கள்,கட்டிடங்கள் நிறையவே இருக்கிறது அங்கு,இந்த முறை உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளத்தை திறந்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்து இருக்கிறது துபாய் கடந்த ஜூலை 7 ஆம் தேதி இந்த நீச்சல் குளம் திறக்கப்பட்டது முதன் முதலாக அந்த நீச்சல் குளத்தை துபாய் இளவரசர் Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum மற்றும் ஹாலிவுட் நடிகர் Will smith இருவரும் பார்வையிட்டனர் அதை பற்றி அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து உள்ளனர்.








இப்பொழுது நாம் அந்த Deep Dive Pool-யின் வடிவமைப்பை பற்றி பாப்போம்,இந்த நீச்சல் குளம் சுமார் 60 மீட்டர் ஆழம் கொண்டது.அதுமட்டுமில்லாமல் இதுதான் உலகிலேயே ஆழமான நீச்சல் குளம் இந்த நீச்சல் குளம் 14 மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பபட்டுள்ளது இது ஆறு ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்ப போதுமானது.இந்த நீச்சல் குளம் Sunken City என்ற Theme அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது,நீச்சல் குளத்தின் உள்ளே 56 அதிநவீன கேமராகள் உள்ளன Diver-களின் நிலைமையை கண்காணிக்க தனித்துவமான  Lightening வசதியும் Sound வசதிகளும் உள்ளது.


அது மட்டும்மில்லாமல் தங்களது நண்பர்கள் யாராவது Dive செய்தல் அதை வெளியிலிருந்து பார்க்கும் வண்ணம் ஜன்னல்கள் உள்ளது அதன் மூலம் பார்க்கலாம்.இங்கு அவர்கள் Diving தெரியாதவர்களுக்கு சொல்லியும் கொடுக்கிறார்கள் அதற்க்காக ப்ரத்யேகமா Courseம் அங்கேயே உள்ளது.


இன்னும் ஒரு சில வாரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது...


அதை பற்றிய youtube காணொளி..




 


Post a Comment

0 Comments