Dale Steyn-டெஸ்ட் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத பந்து வீச்சாளருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



ஒரு ஆக்ரோஷமான ரன்அப் கூரிய பார்வை அந்த ஆக்ரோஷமான ரன்அப்பில்  இருந்து வெளிவரும் ஒவ்வொறு பந்துகளும் துப்பாக்கிகள் இருந்து வெளிவரும் தோட்டாவை போல அவ்வளவு கச்சிதமாக வெளிவரும்.அவை பேட்ஸ்மேன்களை கொலை நடுங்க செய்துவிடும்,அத்தைகைய மிரட்டலான வர்ணிப்புக்கு சொந்தக்காரர் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.



தென்னாப்பிரிக்காவின் மற்றோரு வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட்யை பார்த்து கிரிக்கெட்டிற்கு வந்தவர்,யாரை பார்த்து கிரிக்கெட்டிற்கு வந்தாரோ அவரே பயிற்சியாளராக கிடைத்தால் எப்படி இருக்கும் அப்படி கிடைக்கப்பட்டவர் தான் டேல் ஸ்டெய்ன்,அவர் எப்பொழுதும் சொல்லுவார் நான் ஓடி வருகையில் ஆலன் டொனால்டை போலவும் பந்தை கைகளில் இருந்து பேட்ஸ்மேன்களுக்கு வீசும் பொழுது சான் பொல்லாக்கை போன்று இருக்க வேண்டும் என்று,அவர் வீசும் ஆக்ரோஷமான பந்துகளுக்கு காரணம் என்னவென்று இப்பொழுது புரிந்து கொள்ளலாம்.
Inswing,Outswing,Reverse Swing தனது ஆசானிடம் இருந்தே கற்று கொண்டார் டேல் ஸ்டெய்ன்,தனது முதல் டெஸ்ட் போட்டியில் Marcus Trescothick போல்ட் எடுத்தார் ஸ்டெய்ன் அதிலிருந்து தொடங்கியது ஸ்டெய்னின் விக்கெட் வேட்டை.


உதாரணத்திற்கு பல சிறப்பான போட்டிகளை சொல்லலாம்.உதரணமாக 2008 ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா அணி சீராக ரன்களை அடித்து கொண்டிருந்த நேரத்தில் உள்ள வந்தார் டேல் ஸ்டெய்ன் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டும்,76 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டும் எடுத்தார் ஸ்டெய்ன்,அவர் அடித்த 76 ரன்கள் சவுத் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு பெரிதும் உதவியது.அதே சீரிஸ்ல ஸ்டெய்ன் பிராட் ஹாட்டின் ஒரு பந்து போடுவாரு ஒரு Perfect Inswinger அந்த பந்து அப்டியே Middle Stump காலி பண்ணும்,அப்ப பக்கத்துல போய் Celebration பண்ணுவாரு பாருங்க வேற லெவல்ல இருக்கும்,அதே போல ஒருநாள் போட்டியில் Brad Haddin LBWல விக்கெட் எடுப்பாரு டேல் ஸ்டெய்ன்.






அதை பார்த்து Commentator Mark Nicholas இப்டி சொல்லுவாரு "Oh, got him, yes, he has!"Steyn got us all, he bowled us all, and yes, he did enjoy getting us all out.இப்படி பல சம்பவங்கள் செய்து இருக்கார் டேல் ஸ்டெய்ன்.சவுத் ஆப்பிரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்குற ஸ்டெய்ன் இதுவரை 439 விக்கெட் எடுத்து இருக்காரு,அதில் 26 Five விக்கெட் haulum 5 தடவ 10 விக்கெட் haulum எடுத்து இருக்கார்.டேல் ஸ்டெய்ன் தொடர்ந்து 2358 நாள் நம்பர் 1 வேகப்பந்துவீச்சாளரா இருந்து இருக்காரு அதாவது 6 ஆண்டுகள்,அவர் தான் எப்படி Reverse Swing பத்தி தெரிஞ்சுகிட்டேன் அப்டினு சொல்லுவாரு,முதல் முறையா இலங்கைக்கு போட்டிக்காக போகையில Dilhara Fernando போட்ட பந்த பார்த்து தெரிஞ்சுகிட்டேன் அப்டினு சொல்லுவாரு,அதன் நான் netsession நிறைய தடவ முயற்சி பண்ணேன் அதன் பிறகு reverse ஸ்விங் போட நல்ல Length இருக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன் அப்டினு சொல்லுவாரு,குறிப்பா சொல்லப்போனால் கவுண்டி போட்டியில் புஜாராவிற்கு ஐந்து பந்துகள் தொடர்ந்து Outswinger போட்டு கடைசி பந்தை Inswinger போட்டு விக்கெட் எடுப்பார்.



தொடர்ந்து சிறப்பாக செயல்ப்பட்டு வந்தாலும் சவுத் ஆப்பிரிக்கா அணி ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கனவு உலக கோப்பையை வெல்ல வேண்டும்,பல முறை மழையினால் சவுத் ஆப்பிரிக்காவின் கோப்பையை வெல்லும் கனவை தகர்த்தது அதேபோலத்தான் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை சௌதப்பிரிக்கா அணி நியூஸிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்ளும் முதல் பேட்டிங் செய்து கொண்டிருந்த சௌதப்பிரிக்கா அணிக்கு மீண்டும் தடைபோட்டது மழை 43 மூன்றாவது ஒவேரில் மழை குறுக்கிட நல்ல நிலையில் ஆடிக்கொண்டிருந்த சௌதப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 281 ரன்களிலே தடைபட்டது அப்பொழுது Abdevillers நியூஸிலாந்து பந்துவீச்சை நாள சிதறித்து கொண்டு இருந்தார்.அடுத்து நியூஸிலாந்து பேட்டிங்கிற்கு வந்தது வழக்கமான அதிரடியை துவங்கினர் Brendon mccullam  மற்ற பேட்ஸ்மேன்களும் கை கொடுக்க நியூஸிலாந்து அணி ஆட்டத்தின் இறுதி கட்டத்தை எட்டியது கடைசி வரை டேல் ஸ்டெய்ன் வீசினார் அந்த நிமிடத்தில் Abdevillers உடன் நடந்த உரையாடலை விவரித்து இருப்பார்.



“I had spoken with AB. We were going through the options. Field size comes into play - short, straight boundary. If you miss your yorker there is a chance he can hit you out of the ground. Big squares - maybe use the bouncer? But a top edge might go over the keeper for six. What about bowling a gun yorker? A lot of people forgot that there was massive dew on the field. The ball was soaking wet. I said, "I can't promise you that I am going to get it in the blockhole. The ball is wet. What I can promise you is a hard back-of-a-length. Try and force him to hit me over midwicket. Get a guy out there. If anything, he can try and run me down to third man." That's what we went for.The planning was there. Elliott just got it right.”



அந்த கடைசி பந்தை தூக்கி சிக்ஸர் அடிப்பார் எலியட் அத்துடன்  சௌதப்பிரிக்காவின் கோப்பை கனவு மறைந்து போனது,அப்படியே பிட்சில் உடையானது போய் உற்காந்து இருப்பார் டேல் ஸ்டெய்ன்.அந்த நேரம் எனக்கு ரொம்ப கடினமானது அதிலிருந்து வெளிவர எனக்கு ரொம்ப நாள் ஆனது அதுதான் எனக்கு கடைசி உலக கோப்பையும் கூட அப்பொழுது நான் ஐபில் விளையாடி கொண்டிருந்தேன் அது எனக்கு கடினமான நேரம் என்று விவரித்து இருப்பார் ஒரு பேட்டியில்.அடுத்து 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடர் ஸ்டெய்ன் அப்பொழுது 416 விக்கெட்களில் இருந்தார்,சான் பொல்லாக்கின் ரெகார்டை சமன் செய்ய சில போட்டிகள் விளையாடினால் போதுமானதாக இருந்தது அப்பொழுது இருந்து ஏற்பட்டது.

தொடர் காயங்கள் திரும்ப மீண்டு வருவார் அடுத்த தொடருக்கு மீண்டும் காயம் ஏற்படும் கடைசியாக 1250 நாட்களுக்கு பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பொல்லாக்கின் சாதனையை சமன் செய்து அதிக விக்கெட்கள் சௌதப்பிரிக்காவின் முதல் பந்துவீச்சாளர் ஆனார் டேல் ஸ்டெய்ன்.


இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத பந்து வீச்சாளர் ஆன ஸ்டெய்ன் சச்சின் டெண்டுல்கர் பற்றி ஒருமுறை இப்படி கூறுவார் 


"When I was bowling at Tendulkar, it felt like he kind of knew what was coming all the time. Bloody frustrating. It is like trying to run through a brick wall and there is just no way you can go through it" 




தொடர் காயங்கள் மட்டும் ஏற்படாமல் இருந்து இருந்தால் இந்நேரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சில் ராஜாவாக இருந்து இருப்பார் இந்த Phalaborwa express.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டேல் ஸ்டெய்ன்.

Post a Comment

0 Comments