கடைசி நாள் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புகளோடு போட்டி தொடங்கியது,அன்றைய தினம் முழு போட்டியும் நடைபெற வாய்ப்பு பிரகாசமா வானில் தெரிந்தது,இந்த போட்டி கண்டிப்பாக ட்ராவில் தான் முடியும் என்று போட்டி தொடங்குவதற்கு முன்பே கணிக்க தொடங்கிவிட்டனர்.அதற்கு முந்தைய நாளே இந்திய அணி தங்களது இன்னிக்ஸை தொடங்கியிருந்தது,ரோஹித் சர்மாவும்,கில்லும் களத்தில் இருந்தனர் இந்திய அணி வெற்றிபெற அல்லது போட்டியை சமன் செய்ய அதிக ரன்களை இந்திய அணி நிச்சயம் அடிக்க வேண்டும்,அதற்கு நிச்சயம் தொடக்க வீரர்கள் நன்றாக ஆட வேண்டும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டக்காரர்களை தனது 10 ஒவேரிலே இழந்தது
சௌதீ பந்துவீச்சில் கில் LBW ஆகி 8 ரன்களில் வெளியேறினார்,அடுத்தது புஜாரா உள்ளே வந்தார் தனது வழக்கமான தடுப்பு ஆட்டத்தில் சற்றேமாரி அணியின் ரன்களை உயர்த்த அவரும் தனது பங்குக்கு ரன்களை சேர்த்தார் மறுமுனையில் ரோஹித் சர்மா சௌதீ வீசிய பந்தில் LBW ஆகி வெளியேறினார் அடுத்ததாக கோலி உள்ளேவந்தார்.அத்துடன் அந்த நாள் முடிவடைந்தது இந்திய அணி இரண்டு விக்கெட்டை இழந்து நின்றது.அடுத்த நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக ஆரம்பம் ஆனது,ஆட்டத்தின் முதல் பகுதி மிகவும் பொறுமையாகவே நகர்ந்து சென்றது,இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பொறுமையாயக விளையாடி வந்தனர் வில்லியம்சன் கண்டிப்பா
தெரியும் இந்த போட்டியை வெல்ல வேணும் எனில் விரைவாக விக்கெட்களை வீழ்த்த வேண்டும்,அதேபோல கோலியின் விக்கெட்டை முதல் இன்னிங்சில் ஜமிஸோனை வைத்தே வீழ்த்தினார் வில்லியம்சன் ஷார்ட் ஆஃப் லென்த்தில் வந்து, அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்ப்பில் போன பந்தைக் கோலி தொட அது கேட்சானது கோலி வெளியேறினார் அடுத்து ரகானே உள்ள வந்தார் ஜேமிசன் பந்துவீச்சை புஜாரா திணறுவதை பார்த்து தொடர்ந்து ஜேமிசன் வைத்தே பந்துவீசினார் விளைவு கோலி வெளியேறிய பந்தாவது பந்தில் புஜாரா டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அடுத்தது ரிஷாப் பண்ட் உள்ளே வந்தார் மறுமுனையில் ரகானே பந்துகளை மிக நேர்த்தியை
எதிர்கொண்டு விளையாடிக்கொண்டுஇருந்தார் அவருக்கு கண்டிப்பா தெரியும் ஒரு நல்ல பார்ட்னெர்ஷிப்பை இந்த சூழ்நிலையில் உருவாக்க வேண்டும் என்று அதுபோலவே பண்ட் பொறுமையாக விளையாடினர் இருவரும் சேர்ந்து ரன்களுக்கு மேல் சேர்த்து கொண்டு இருந்தனர் அப்பொழுது பன்ட்டின் கேட்சை ஸ்லிப்பில்விட்டார் சௌதீ இதை இரண்டு பேரையும் நீடிக்க விட கூடாது என்பதை உணர்த்த வில்லியம்சன் Wagnor மற்றும் பௌல்ட் உள்ள கொண்டு வந்தார் வில்லியம்சன் அதற்கு நல்ல பலன் கிடைத்தது ரகானே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பண்ட் சற்றே தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர முயற்சித்தார் wagnor வீசிய
பந்துகளை இறங்கி அடிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார் ஆனால் அது கைகொடுக்கவேயில்லை மறுமுனையில் ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்த சில மாற்றங்களை செய்தார் வில்லியம்சன் வாக்னர், ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்துகளை வீசத்தொடங்க ஜடேஜா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அடுத்து அஸ்வின உள்ள வந்தார் அவரும் ரன்களை எடுக்க பேட்டை சுழட்டி கொண்டு இருந்தார் பௌண்டரிகள் ஏதும் இல்லாமல் ஓடியே ரன்களை எடுத்து கொண்டு இருந்தனர் பண்ட் இருப்பதால் இந்திய அணி ரசிகர்கள் சற்றே ஆறுதலாக போட்டியை பார்த்து கொண்டு இருந்தனர் பௌல்ட் வீசிய பந்தை தூக்கி அடிக்க ஒரு கடினமான கேட்சை பிடித்து
நிக்கோலஸ் பண்டை வெளியேற்றினர் அவ்வளவுதான் இந்திய அணியின் கோப்பை கனவு முடிந்துவிட்டது என்று அனைவரும் முடிவுக்கு வந்துவிட்டனர் டைலெண்டர்கள் இந்திய அணிக்கு 2018 பின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் இணைந்து டெஸ்ட் போட்டியில் எடுத்துள்ள ரன்களின் ஆவரேஜ், வெறும் 21 என்பதால் அவர்கள் ஒன்று பெரிய மாற்றத்தை செய்யமாட்டார்கள் என்று அனைத்து இந்திய ரசிகர்களும் நினைத்து கோப்பையை நிச்சயம் நியூஸிலாந்து அணிதான் வெல்ல போகிறது என்று சமூகவலைத்தளங்களில் வாழ்த்து செய்தி அனுப்பி கொண்டு இருந்தனர் இந்திய ரசிகர்கள்.அதேபோலவே இந்திய அணி 170 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும்
இழந்தது.Tailenderkalai வீழ்த்தியதில் எந்தளவுக்கு பந்துவீச்சளர்களுக்கு பங்கு இருக்கிறதோ அதே போல கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட வில்லியம்சன் பங்கு அதிகமா இருக்கிறது.அடுத்ததாக நியூஸிலாந்து அணி 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது தொடக்க ஆட்டக்காரர்களை இறக்கியது டாம் லதம் மற்றும் கான்வே களம் இறங்கினார் மிகவும் எளிமையான இலக்கு இரண்டு பேருமே மிகவும் பொறுமையாக விளையாடிக்கொண்டு இருந்தனர் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறிக்கொண்டிருக்க அஷ்வினை உள்ளே கொண்டு வந்தார் கோலி நல்ல பலன் கிடைத்தது டாம் லதம் இரண்டாவது முறையாக அஸ்வினின்
பந்துவீச்சில் கிரீஸைவிட்டு வெளியே வந்து அடிக்க முற்பட்டு ஸ்டும்ப்பிங்ல் வெளியினர் அடுத்து வில்லியம்சன் உள்ளே வந்தார்,அடுத்து மீண்டும் அஸ்வின் பந்துவீச்சில் கான்வே LBW முறையில் அவுட் ஆனார் அடுத்து ரோஸ் டெய்லர் வந்தார் இருவரும் பொறுமையாக அணியை இலக்கை நோக்கி நகர்த்தி கொண்டிஇருந்தனர் இருவரின் அனுபவமும் கை கொடுக்க இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க திணறி கொண்டு இருந்தனர் முதல் இன்னிங்ஸ் தவறவிட்ட அரைசதத்தை இரண்டாவது இன்னிங்ஸ்ல் பூர்த்தி செய்தார் ரோஸ் டெய்லர் சமி பந்துவீச்சில் பௌண்டரி அடித்து முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது
0 Comments