உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டி வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது,கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு வர இறுதியில் அமர்ந்து இருந்தனர்.கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க தங்களுடைய பிரௌசர்களை திறந்து பார்ப்பதற்கு பதிலாக Weather ரிப்போர்ட்டை வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டு இருந்தனர்,வானிலை ஆய்வு மையத்துக்கு போன் பண்ணி பேசாதது தான் மிச்சம் அதையும் யாரும் செய்து இருக்ககூடும்.அந்தளவுக்கு சௌதாம்டனின் வானிலை போட்டியை தொடங்கவிடவே இல்லை.சமூக வலைத்தளங்களில் ஐசிசி பார்த்து உங்களுக்கு போட்டி நடத்த வேறு மைதானமே கிடைக்கலையா என்ற அளவுக்கு இருந்தது நிலைமை.

தொலைக்காட்சி முன் குத்தவைத்து உட்கார்ந்து இருந்தமைக்கு முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடா முடியாமல் ஆட்டம் ரத்து ஆனது தான் வேதனை.Reserve day ஒன்னு இருக்கு அதுல கழிச்சுக்கலாம் என்று நாமே நமக்கு ஆறுதல் கூறி கொண்டு இரண்டாவது நாளை நோக்கி எல்லோரும் நகர்ந்தோம்.வானிலையை பார்த்து பார்த்து நமக்கே தெரிஞ்சுருக்கு மேட்ச் நடக்குமா நடக்காதான்னு,அப்பறம் ஒரு வழியா சூரியன் மறைந்து இருந்து வெளிச்சம் தர ஆட்டம் தொடங்கியது.போட்டி தொடங்கும் முன் ப்ளெயிங்க் லெவனில் மாற்றம் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு இருந்தும் இந்திய அணி மாற்றம் இல்லாமல் அறிவித்த அணியோட இறங்கியது கோலி படை,

நியூஸிலாந்து அணி தங்களது ப்ளெயிங்க் லெவனில் ஒரு ஸ்பின்னர் இருந்த அவரையும் தூக்கிவிட்டு உள்ளே ஒரு வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வந்தது.டாஸ் போடப்பட்டது வானிலை தான் நமக்கு சாதகமா இல்லை டாஸ் ஆவது நம்ம இருக்கும் என்ற இந்திய ரசிகர்கள் நினைத்த நிலையில் அதுவும் நியூஸிலாந்து பக்கம் சென்றது அவர்களும் எதிர்ப்பார்த்தது போலவே பந்துவீச்சை தேர்வு செய்தனர்.இந்தியாவின் ஆட்டத்தை ரோஹித் ஷர்மாவும்,கில்லும் துவங்க நியூஸிலாந்து தனது பௌலிங்கை சௌதீ மற்றும் போல்டை வைத்து துவங்கியது மைதானம் ஸ்விங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் இரண்டு பெரும் பொறுமையாக விளையாடினர்,


அதே போல மைதானம் பந்துவீச்சளர்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது.கில்லும் கிரீஸை விட்டு வெளியே சென்று பந்துகளை நன்றாக எதிர்கொண்டார்.பௌல்ட் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்த குட் லெந்தில் தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தார்,ரோஹித்தும் அதை திறம்பட எதிர்கொண்டார்.மறுமுனையில் சௌதிக்கு நல்ல லென்த் கிடைக்காமல் அதை இருவரும் பயன்படுத்தி ஆடினர்.பாட்நர்ஸிப் 50 நெருங்க வில்லியம்சன் பந்துவீச்சில் மாற்றத்தை கொண்டு வந்தார்,ஜேமிசன் தனது உயரமான உடலை கொண்டு பந்தை வீச பந்து காற்றில் நன்றாகவே ஸ்விங் ஆனது,முன்னே வந்து பந்தை ஆடிக்கொண்டிருந்த கில் ஜேமிசன் பந்துவீச்சை ஆட முற்பட பந்து ஹெல்மட்டை தாக்கியது,சற்று தடுமாறிபோனார் கில்,நல்லவேளை காயம் ஏதும் ஏற்கப்படவில்லை மீண்டும் ஆட தொடங்கினார் கில். ரோஹிட் சர்மா 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசனின் ஒரு லேட் ஸ்விங் பந்துவீச்சில் ஸ்லிப்பில் சௌதியிடம் கேட்ச் ஆனார்.அடுத்ததாக நீல் வாக்னெர் பந்துவீச்சிற்கு வந்தார்,போட்ட
முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஒரு அருமையான லென்தில் கில்லை அவுட்டாகினர் கீப்பரிடம் கேட்ச் ஆகி.கோலியும் புஜாராவும் களத்தில் இருக்க கோலி தனது கிளாசிக்கான கவர் டிரைவ் மூலம் ஒரு பௌண்டரி அடித்து தனது கணக்கை துவங்கினார் மறுபுறம் புஜாரா நிதானமான ஆட்டத்தையே தொடர்ந்தார் அடித்த பந்துகளையும் நியூஸிலாந்து பீல்டர்கள் அருமையாக தடுத்தனர்.இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்தனர்,திரும்ப வில்லியம்சன் ஜேமிசனயும் பௌல்ட்யும் உள்ளே கொண்டு வந்தார்,இன்ஸ்விங்ல் சற்று திணறும் புஜாராவை பௌல்ட்டை வாய்த்த முயற்சி செய்தார் வில்லியம்சன் அதற்கு பலனும் கிடைத்தது புஜாராவும் அதேபோல

இன்ஸ்விங்கில் LBW ஆனார்.அடுத்ததாக ரகானே உள்ள வர இருவரும் சேர்ந்து நிதானமா விளையாடி வந்தனர் திரும்பவும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட இந்திய அணி 142/3 என்ற ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.அடுத்து மூன்றாவது நாள் ஆட்டம் மேகமூட்டம் இல்லாமல் போட்டி ஆரம்பித்தது ரகானே நிதனமா பந்துகளை அடித்து கொண்டிருந்தார்,விராட் கோலி அரைசதம் அடித்துவிடுவார் என்று எல்லாரும் நினைத்து கொண்டு இருக்கையில் ஜேமிசன் பந்துவீச்சில் LBW ஆனார்,அடுத்தது ரிஷப் பண்ட் உள்ள வந்தார் அவரும் நிதானமா விளையாடாமல் ஜேமிசன் பந்தை அடிக்க ஆசைப்பட்டு ஸ்லிப்பில்

கேட்ச் கொடுத்துவிட்டுப்போனார்.அடுத்தது ஜடேஜா வந்தார் ஒருபுறம் ரகானே அரைசதம் நெருங்கி கொண்டியிருந்த நிலையில் நீல் வாக்னர் பந்துவீச்சில் முதல் அடித்த அதே திசையில் அடிக்க முற்பட்டு நியூஸிலாந்தின் பீல்ட் செட்டப்பில் வீழ்ந்தார் 49 ரன்களுக்கு,அடுத்து அஸ்வினும்,ஜடேஜாவும் இந்திய அணியின ஸ்கோரை 200 ரன்களுக்கு கொண்டு வந்தனர்,பிறகு அஸ்வின் சௌதியின் அவுட் ஸ்விங்கில் அவுட்டாகினர்,அடுத்து இஷாந்த் சர்மா ஜடேஜாவுடன் சேர ஜடேஜா stirike மைண்டைன் செய்து கொண்டு இருந்தார் விக்கெட் விழ கூடாது என்பதற்காக ஆனால் இஷாந்த் ஷர்மாவும் தனக்கு கிடைத்த பந்துகளை நன்றாகவே எதிகொண்டார்,ஆனால் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்,அடுத்து பும்ரா உள்ள வந்தார் வந்தே வேகத்தில் ஜேமிசன் யார்கரில் வெளியேறினார்,ஜெமிசன் ஐந்து விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் தன்னுடைய ஹாட்ரிக் விக்கெட்டை எடுக்க ஷமிக்கு தனது ஹாட்ரிக் பாலை வீசினர் சமிக்கு அதே வேகத்தில் அவரும் அந்த பந்தை

பௌண்டரி நோக்கி அடித்தார் எந்த தடுமாற்றமும் இல்லாமல்,அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜா அவுட் ஆக இந்திய அணி தனது முதல் இன்னிக்ஸ்ல் 217 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. நியூஸிலாந்தின் முதல் இன்னிக்ஸை நோக்கி..
0 Comments