புத்துணர்வு பெற்று மீண்டெழும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்..


ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகரிடம் சென்று உங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் பிடிக்குமா அல்லது T20 கிரிக்கெட் பிடிக்குமா என்று கேட்டுப்பாருங்கள்,அவர் சட்டென்று சொல்லுவார் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தான் என்று.அதுமட்டுமில்லாமல் நிச்சயம் எதாவது ஒரு டெஸ்ட் போட்டியை குறிப்பிட்டு அதில் இப்படி நடந்தது என்று எதாவது சுவாரசியமான தகவல்களையும் நிச்சயம் சொல்லுவார்.T20 போட்டியை பற்றி கேட்டால்,அவருக்கு நிச்சயம் கோபம் வரும் உண்மையான கிரிக்கெட்டின் ரசனையை அது அழித்துவிட்டது என்பார்.இதுவே இப்பொழுது



உள்ள கிரிக்கெட் ரசிகரை கேட்டால் ஒரு சிலரை தவிர அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டை வெறுப்பார்கள்,5 நாலும் உக்காந்து எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்பார்.ஆனால் டெஸ்ட் ரசிகர்களுக்கு அதுதான் உண்மையான சுகமே,அந்த சுகத்தை இப்பொழுது T20 பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்களும் சுவைக்க துவங்கியிருக்கிறார்கள் என்ற சொல்லலாம்.அதுவும் இந்திய,ஆஸ்திரேலியா தொடரில் The Gabba மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி உச்சகட்ட எதிர்பார்ப்பில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மைதானத்தில் வென்றது,அந்த கடைசி நாள் முழுவதும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் அதை பற்றி தான்,



பேச்சு பொருள் மீம்ஸ்களும்,ஹாஷ்டகளும் Test Cricket is Back அது இது என்று பறக்க,எப்போதாவது கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்களும் அந்த கடைசி நாளை பார்த்து இருப்பார்கள்.டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் சற்று நிம்மதி பெரு மூச்ச விட்டு இருப்பார்கள் காலம் மீண்டும் பழைய போட்டிகளை கண்முன்னனே கொண்டு வருகின்றது என்று.இந்த சிறிய நிம்மதி பெருமூச்சுக்கு பின்னால் பின்னால் பல ரசிகர்களின்,முன்னாள் பிளேயர்களின் கோரிக்கையும் இருக்கிறது.ஒருநாள்,T20 போட்டிகளுக்கு நடப்பது போல் டெஸ்ட் போட்டிகளுக்கும் உலகக்கோப்பை வேண்டும் என்று.இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தன்மையை அதாவது தனித்துவத்தை மீட்டெடுக்க முடியும் என்று கோரிக்கை வைத்து கொண்டே இருந்தனர்.



அதை எல்லாம் கருத்தில் கொண்டு ICC Test World Cup பத்தி அறிவிச்சாங்க,ஏற்கனேவே ICC பல முயற்சி பண்ணியும் நடத்த முடியாம போயிருச்சு,கடைசியா 2019 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் உலகக்கோப்பை நடக்க போறதா அறிவிச்சாங்க.ICC தரவரிசையில இருக்குற Top 9 அணிகள் இந்த போட்டியில கலந்து கொள்வாங்க மொத்தம் ஒரு அணி 6 match விளையாடுவாங்க 3 மேட்ச் தங்களோட நாட்டுலையும்,அடுத்த 3 போட்டி வெளிநாடுளையும் விளையடுவாங்க இந்த உலககோப்பையோட முதல் போட்டி 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் தொடங்கி 2021 ஆம் ஆண்டு சௌதாம்ப்டன்ல இந்தியா நியூஸிலாந்து ஒட இறுதிப்போட்டியில் வரையும் வந்து இருக்கு.நான் துவக்கத்தில் மேற்சொன்ன போட்டி எல்லாம் நடந்தது இதில் தான் அதுவும் நான் ஒரு போட்டியை தான் சொன்னேன்,அதேபோல் பல போட்டிகள் நடைபெற்று இருக்கிறது.இப்பொழுது நாம் இறுதி போட்டிக்கு வருவோம் முதலில் சௌதாம்ப்டன்



மைதானம் பற்றி பார்ப்போம்,இந்த மைதானத்தில் மொத்தமே 5 டெஸ்ட் போட்டிகள் தான் நடைபெற்று இருக்கிறது,அதில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடியிருக்கிறது,இந்த மைதானத்தின் பிட்சை பொறுத்தவரை கடைசியாக சொன்ன தகவலின்படி Pace மற்றும் Bounce சாதகமா இருக்கும் என்று சொல்றாங்க,அப்ப கண்டிப்ப இரண்டு அணிகளுக்குமே சாதகமான மைதானமாக தான் இருக்கும்.இப்பொழுது இந்திய அணியை பற்றி பார்ப்போம்,விராட் கோலி தலைமையில் இந்திய அணி பல்வேறு வரலாற்று சிறப்பான வெற்றிகளை பெற்றிருந்தாலும் இதுவரை ICC Tropies ஏதும் வெல்லவில்லை இது இந்திய ரசிகர்களுக்கும் கோலி ரசிகர்களுக்கும் சற்று வருத்தம் தான்.அதை இந்த இறுதி போட்டியில் நிச்சயம் களைய முனைவார் கோலி,இந்திய அணி வீரர்களும் கடைசியாக இங்கிலாந்தை அணியை வென்று அடுத்ததாக இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.இந்திய அணியின் Squad பொறுத்தவரை பேட்டிங்கில் எந்த மாற்றமும் பெரிதாக இருக்காது,பௌலிங்



Lineup பெரிதாக கவனம் செலுத்த வேண்டும் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து கண்டிப்பாக 3 வேகப்பந்து வீச்சாளரை கொண்டு செல்வார்கள் ஆடுகளமும் Pace மற்றும் Bounce சாதகமா இருக்கும்னு கடைசியா வந்த பிட்ச் ரிப்போர்ட்ல சொல்லியிருக்காங்க,இது ஒரு வகைல ரோஹித் ஷர்மாவிற்கும் சாதகமா இருக்கும்.ஆனால் பிட்சின் தன்மை கடைசி நேரத்தில் கூட மாற வாய்ப்பு இருக்கிறது.


அடுத்து கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி,இதுவரை எந்த உலககோப்பையையும் வென்றதில்லை கடைசியாக வென்றது ICC championship Trophy அதுவும் 2000 ஆண்டில் அதன் பிறகு ஒரு கோப்பையும் நியூஸிலாந்து அணி வெல்லவில்லை,கடைசியாக
நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கூட இங்கிலாந்திடம் வீழ்ந்தார்கள்.இந்த வடுவை மறைக்க நியூஸிலாந்து அணி கடுமையாக போராடும் அதில் துளியும் சந்தேகம் இல்லை,நியூஸிலாந்து அணியை பொறுத்தவரை இந்திய அணியை போலவே பேட்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது,பௌலிங்கில் டிம் சௌதி,ட்ரெண்ட் பௌல்ட்,நெய்ல் வாக்னர் அடுத்து அஜால் படேல் இன்னும் ஒரு பந்துவீச்சளார் Matt ஹென்றியா அல்லது kyle ஜமிசன் என்பது தான் யார் என்று தெரியவில்லை,மைதானத்தின் தன்மையை பொறுத்து கடைசி நேரத்தில் இது முடிவாகும். எந்த அணி வென்றாலும் சரி டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல போட்டி காத்திருக்கிறது,சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி நிச்சயம் ஆட்டத்தில் அனல் பார்க்கும்.இதிலிருந்து T20 போட்டிகளை போல டெஸ்ட் போட்டிகளும் முக்கியத்துவம் பெறட்டும்...

Post a Comment

0 Comments