80-களின் காலகட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களை திணறடித்து கொண்டிருந்த கலாம்,அந்த பேட்ஸ்மேன்களை மேலும் திணறடிக்க அணிக்குள் காலடி எடுத்து வைத்தார் வாசிம் அக்ரம்,தனது அசாதாரணமான Reverseஸ்விங் பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்தார்.
வேகப்பந்துவீச்சாளர் என்றால் பந்துகள் வேகமா போட்டால் தான் விக்கெட் எடுக்கமுடியும் என்று அழுத்தமாக கூறப்பட்ட காலத்தில் சரியான லைன், லென்த்தோடு,போட்டால் மட்டும் போதும் எத்தகைய பேட்ஸ்மேன்களையும் வீழ்த்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர் வாசிம் அக்ரம் இன்றைய காலகட்டத்தை போல அப்பொழுது வீடியோ Analytics எல்லாம் கிடையாது,ஆனால் அத்தகைய காலகட்டத்தில் இதை எல்லாம் செய்தார் வாசிம் அக்ரம் ஒரு போட்டிக்கு முன்பே அந்த மைதானத்தின் திறனை அறிந்து செயல்படுவதில் வாசிம் அக்ரம் திறமைவாய்ந்தவர்அது மட்டுமின்றி பேட்ஸ்மேன்கள் எந்த Positionகளில் உதரணமாக Front foot,Back foot இவைகளில் எதில் அந்த பேட்ஸ்மேன் weak Point என அறிந்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்.
குறிப்பாக சொல்லப்போனால் 1992 உலகக்கோப்பை போட்டி அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பேட்ஸ்மேனாக இறங்கி ரன்கள் அடித்ததிலும் சரி,முக்கிய பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் விக்கெட் எடுத்ததிலும் சரி வாசிம் அக்ரமின் பங்கு மிக சிறப்பானது,அந்த போட்டியில் மட்டும் வாசிம் அக்ரம் 33 Runkal மற்றும் மூன்று முக்கிய விக்கெட்கள் குறிப்பாக சொல்லப்போனால் இயான் போத்தம்,கிறிஸ் லூயிஸ் ஆலன் லாம்ப் இந்த இரண்டு பேரையும் ஒரே ஒவேரில் விக்கெட் எடுத்து Man of the Match award,பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையும் வாங்கி கொடுத்தார் வாசிம் அக்ரம்.பேட்ஸ்மேன்களை திணறடிக்க வாசிம் அக்ரம் பயன்படுத்திய முக்கிய யுக்தி அவரது கையிலிருந்து விடுபடும்வரை, பேட்ஸ்மேன்களால் பார்க்க முடியாதவாறு, பந்துகளை, மறைத்துக்கொண்டு வீசுவது. இது தேய்ந்த பந்துகளை வீசும் பிந்தைய ஓவர்களில், அக்ரமுக்கு, மிகவும் பயனுடையதாக இருந்தது. இதனால், தேய்ந்தபக்கம், தன் பக்கம் இருக்கிறது என்று கவனித்து, ரிவர்ஸ் ஸ்விங்கை எதிர்பார்த்து, பேட்ஸ்மேன் முன்கூட்டியே தயாராகவும் முடியாது,அதுதான் வாசிமின் ஆயுதம்.
0 Comments