நம்மள நிறைய பேர் பறக்கும் கார் ஒட்டியிருப்போம்,நிஜத்துல இல்ல கேம்ல அதுவும் எல்லாரோடைய Favourite கேம் ஆன GTA கேம்ல cheat போட்டு பறந்து இருப்போம்.அதுபோல உண்மையிலேயே அதுவும் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருப்போம் அதை சாதித்து காட்டியிருக்கிறது ஸ்லோவாகிய நாட்டை சார்ந்த Klien vision கம்பெனி.
கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஸ்லோவாகியா நாட்டில் உள்ள இரண்டு சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையே பறந்து தனது முதல் உள்நாட்டு பயணத்தை முடித்து இருக்கிறது அந்த பறக்கும் கார்.அந்த பறக்கும் காரை பற்றி பார்ப்போம் உலகில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான BMW-வின் என்ஜின் கொண்டு அந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் அந்த கார் சாதாரண நாம் எப்பொழுதும் பயன்படுத்தும் எரிபொருளான பெட்ரோலை கொண்டு இயங்கக்கூடியது,இந்த காரில் இரண்டு நபர்கள் பயணம் செய்யலாம் 200 கிலோ எடை தாங்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.அதன் தயாரிப்பாளரான Prof Stefan Klein கூறுகையில் இந்த கார் 1000Km தூரம் சுமார் 8,200ft அடியில் பறக்கக்கூடியது வானில் பறக்கையில் அதிகபட்ச வேகமாக சுமார் 170km/h வேகத்தில் சென்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Comments