உலகில் முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கக்கூடிய விமான நிலையம் கேரளாவில் உள்ள கொச்சின் சர்வேதேச விமான நிலையத்தில் அமைந்து இருக்கிறது அதுவும் 2015 ஆம் ஆண்டே அமைச்சு இருக்காங்க இது வரையும் தெரியல அதை பத்தி நெட்ல படிக்கையில ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு அதைப்பத்திதான்எழுதி இருக்கேன்.
கேரளா இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் எதாவது ஒரு வகையில் முன்னுரதானமாக இருக்கும் கண்டிப்பாக,ஆனால் இந்த முறை உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டியிருக்கிறது கேரளா எந்த வகையில் என்று கேட்கின்றிர்களா.
உலகிலேயே முதல் முதலாக முற்றிலும் சூரிய ஒளி மின்சாரத்தை கொண்டு இயங்கும் வகையில் கொச்சியில் உள்ள சர்வேதேச விமான நிலையத்தை மாற்றியிருக்கிறது கேரளா மாநிலம்,இந்த திட்டம் கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி 2015 மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களால் திறக்கப்பட்டது.அடுத்தாக இந்த சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையம் எப்படி அமைந்து இருக்கிறது என்று பார்ப்போம்,இந்த நிலையம் விமான நிலையத்தில் உள்ள cargo complex அருகே சுமார் 45 ஏக்கர் அளவில் 46,150 சூரிய ஒளி தகடுகளை கொண்டு அமைந்து இருக்கிறது.இதன் மூலம் ஒரு நாளைக்கு 50,000 to 60,000 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தி ஆகிறது,இந்த மின்சாரம் விமான நிலையத்தின் தேவைக்கு போக மீதி உள்ள மின்சாரம் Grid-ற்கு அனுப்பபடுகிறது வெயில் குறைவாக உள்ள நாட்களில் அந்த மீதி உள்ள மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் அவர்கள் மின்சார தன்னிறைவு அடைந்து இருப்பதை கூறுகின்றனர்,இந்த செயல்முறை எல்லாமே Remote monitoring மூலம் கண்காணிக்கப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் 300000 டன் co2 உற்பத்தி ஆகுவதை தடுக்கமுடியும் என்று கூறுகின்றனர்.
இன்னொரு திட்டத்தையும் இந்த விமான நிலையத்தில் செயல்படுத்தி வருகின்றனர்,அந்த சூரிய ஒளி தகடுகளுக்கு கீழ் அவர்கள் சில காய்கறிகளையும் விளைவித்து வருகின்றனர்,உதாரணமாக பூசணிக்காய்,வெள்ளரிக்காய் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனையும் செய்து வருகின்றனர்.இந்த விமான நிலையம் ஐக்கிய நாடுகள் சபையின் 2018 ஆம் ஆண்டிற்கான Champion of Earth award விருதை வென்று இருக்கிறது அதுமட்டுமில்லாமல் பல விருதுகளை வென்று இருக்கிறது,இந்த விமான நிலையம்.
0 Comments